May 27

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பிரான்ஸ் வீரரை சந்திக்கிறார் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் 9 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால் தனது முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் பெனோய்ட் பேருடன் மோத உள்ளார்.

கத்திக் குத்து தாக்குதலுக்குள்ளான கிவிடோவா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார்.ஆண்டின் 2-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி ஒற்றையர் பிரிவில் யார்- யாருடன் மோவது என்பது குலுக்கல் (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தனது முதல் சுற்றில் 85-ம் நிலை வீரரான ரஷியாவின் ஆந்த்ரே குஸ்னெட்சோவுடன் மோதுகிறார். வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) தகுதி நிலை வீரரையும், ரபெல் நடால் (ஸ்பெயின்) பிரான்சின் பெனோய்ட் பேரையும், நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), மார்செல் கிரானோலர்சையும் (ஸ்பெயின்) சந்திக்கிறார்கள்.