Jun 13

அதிரடி சிறப்பம்சங்களுடன் விவோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் நெக்ஸ் சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 6.59 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன் மற்றும் பக்கவாட்டுகளில் 1.71மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள், 91.24% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. புதிய நெக்ஸ் ஸ்மார்ட்போனில் இயர்பீஸ் நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக ஸ்கிரீன் சவுன்ட்காஸ்டிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் சிறப்பான பேஸ் மற்றும் மென்மையான டிரெபிள் அனுபவம் வழங்குகிறது. ரே டேட்டா காம்பென்சேஷன் அல்காரிதம் பயன்படுக்கி லைட் சென்சாரை திரையின் கீழ் மறைக்கிறது. இதன் மைக்ரோ-ஸ்லிட் இன்ஃப்ராரெட் சென்சாரும் திரையின் மேல் மறைக்கப்பட்டு இருக்கிறது.

8 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா ஒவ்வொரு முறை கேமரா ஆப் திறக்கும் போது தோன்றி, பின் தானாக மறைந்து கொள்கிறது.

இவ்வகை கேமரா மிகவும் சிறிய-ரக மோட்டார்களை பயன்படுத்துகிறது. இந்த மோட்டார்களுக்கு பிரத்யேக ஐசி மற்றும் பிரெசிஷன் கன்ட்ரோல் அல்காரிதம்கள் வழங்கப்பட்டுள்ளதாக விவோ தெரிவித்துள்ளது. இதில் 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 4-ஆக்சிஸ் OIS, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன்கள் டைமன்ட் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட நெக்ஸ் எஸ் ஸ்மார்ட்போன் விலை 4498 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.47,375) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் 256 ஜிபி வெர்ஷன் விலை 4998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.52,640) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் கொண்ட நெக்ஸ் ஏ ஸ்மார்ட்போன் விலை 3898 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.41,055) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்கள் ஜூன் 23-ம் தேதி முதல் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.