Jun 12

இன்றைய ராசிபலன் 12.6.2018

மேஷம்


மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். 


ரிஷபம்


ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


மிதுனம்


மிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள். 


கடகம்


கடகம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.   


சிம்மம்


சிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள். 


கன்னி


கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள். 


துலாம்


துலாம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள். 


விருச்சிகம்


விருச்சிகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


தனுசு


தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள். 


மகரம்


மகரம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள். 


கும்பம்


கும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள். 


மீனம்


மீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.