Mar 13

ஸ்ரீதேவியின் கணவர் கபூரின் டுவிட்டர் பக்கமும் முடக்கம்

நடிகர், நடிகைகள் தங்கள் பெயரில் சமூக வலைத்தளங்களில் பக்கங்களை ஆரம்பித்து அதில் தங்களது படங்கள் மற்றும் தங்களது சொந்த வாழ்க்கையில் நடைபெறும் விடயங்களையும் ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டு வருகின்றனர். 

பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் டுவிட்டர் கணக்கில் இருந்து ஒருசில தகவல்களும் பகிரப்பட்டு வருகிறது. 

அதில் 'லக்னோவில் நடக்க உள்ள ஒரு நிகழ்ச்சிக்காக  பணம் வசூலிப்பதாகக் கூறி, அவரது நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் போஸ்டர் பகிரப்ட்டுள்ளது. 

அதில் ஒரு மொபைல் எண்  கொடுக்கப்பட்டு, இந்த எண்ணின் பேடிஎம் கணக்குக்கு ரூ.5,000 மற்றும் ரூ.10,000 தொகையை அனுப்புங்கள்' என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் டுவிட்டர் பக்கமும் மர்ம நபர்களால் ஹெக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை அறியப்பட்டுள்ளது.

தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு பணிகளில் பிசியாக இருக்கும் போனி கபூர் இதுகுறித்து பொலிஸாரிடத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

நடிக்கை திரிஷா,பின்னணி பாடகி சுசித்ரா, மடோனா செபஸ்டியனும் தங்ளது டுவிட்டர் பக்கங்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.