May 27

ரஜினி அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட கருத்து: நக்மா

ரஜினி அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட உரிமை; அவ்வாறு அவர் அரசியலுக்கு வந்தால் காங்., கட்சிக்கு அவரை அழைப்போம்' என அகில இந்திய மகிளா காங்., செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி தான் முடிவு எடுக்கவேண்டும். நான் ரஜினியை சந்தித்து பேசினேன். தனிக்கட்சி துவங்குவது குறித்தோ அல்லது ஏதாவது கட்சியில் இணைவது குறித்தோ அவர்தான் தீர்மானிக்கவேண்டும். அவ்வாறு அவர் அரசியலுக்கு வந்தால் காங்., கட்சி அவரை அழைக்கும். இதுதொடர்பாக அவரை சந்தித்து பேசுவேன்.

தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஜெ., மறைவுக்கு பின் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் எப்படி இருக்கின்றன என்பது மக்களுக்கு தெரியும். அ.தி.மு.க., அரசு உட்கட்சி விவகாரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்குகிறது. தமிழகத்தில் 100 நாளில் நல்லாட்சி தந்ததாக மாநில அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பாஜக அரசின் மூன்றாண்டு கொண்டாட்டத்திற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. பண மதிப்பீட்டு குறைப்பு பிரச்சனையில் பலர் தங்கள் வாழ்வை இழந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.