Jun 08

இணையத்தில் லீக் ஆன விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன்

சீனாவில் ஜூன் 12-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் நெக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில், நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் விவோ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் மற்றும் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, நாட்ச் இல்லாத வடிவமைப்பு கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தை பிராக்சிமிட்டி சென்சார் மற்றும் பெய்சோ எலெக்ட்ரிக் செராமிக் அகௌஸ்டிக் சிஸ்டம் பன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 4.0 இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.விவோ நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ நெக்ஸ் எஸ் விலை 6998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.73,270) என நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் நெக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை 4998 யுவான் (இன்திய மதிப்பில் ரூ.52,330) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.