May 27

‛மோடி அரசு நல்லாட்சி வழங்க தவறிவிட்டது' : ராகுல்

மூன்றாண்டுகளை நிறைவு செய்த மோடி தலைமையிலான மத்திய அரசு, நல்லாட்சி வழங்க தவறிவிட்டது என காங்., துணை தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு நல்லாட்சி வழங்க தவறிவிட்டது. மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி, இடையூறு அளித்து வருகிறது. மேலும் கோபம், வெறுப்பை மக்களிடையே விதைத்து வருகிறது. இது மக்கள் பிரச்னைக்கு தீர்வாகாது. மக்களுக்கு வேலை வாய்ப்பும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான் பா.ஜ., அரசு, மத்தியில் மூன்றாண்டுகளை நிறைவு செய்து, அதற்காக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், ராகுல் இக்குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.