May 27

குடும்ப மீளிணைவு – விண்ணப்ப முடிவுத் திகதி ஜூலை 24

தமது பெற்றோர், பேரன் பேத்தி ஆகியோரை கனடாவிற்கு வரவழைப்பதற்காக இவ்வருட ஆரம்பத்தில் சீட்டிழுப்பின் மூலம் 10,000 அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டமை தெரிந்ததே.

அவர்கள் தமது பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களையும், தொடர்பான ஆவணச்சான்றுகளையும் சமர்ப்பிக்கும் இறுதி நாள் ஜூலை 24 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 10,000 அதிஷ்டசாலிகளும் ஆரம்ப விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த 95,000 விண்ணப்பதாரிகளில் இருந்து குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் தமது இறுதி விண்ணப்பத்தையும், ஆவணச்சான்றுகளையும் சமர்ப்பிக்க 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, இதற்கான இறுதித்  தினம் ஜூலை 24 ஆகும்.

குடும்ப மீளிணைவு என்ற முக்கியமான ஒரு விடயம் “லொத்தர்” மூலம் தீர்மானிக்கப்படுவதை எதிர்த்தும், இம்முறையை மாற்றியமைக்கவும் கோரி குடிவரவு அமைச்சரிடம் மனு ஒன்று அண்மையில் கையளிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.