May 26

இறுதிக்கட்ட்த்தை நெருங்கும் பழமைவாதக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல்

பழமைவாதக் கட்சித் தலைமைக்கான தேர்தல் தினம் நெருங்கும் இத்தருணத்தில், கட்சித் தலைமக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களது பிரச்சார அலுவலகங்கள் வாக்குகளைப் பெறுவதற்கான இறுதி முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

பெரும்பான்மையான தமது ஆதரவாளர்கள் தபால் மூலம் தமது வாக்குகளை அளித்துவிட்டதாகவும், ஆயினும் சிலருக்கு இன்னமும் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்படவில்லை அல்லது தாமதமாகவே விநியோகிக்கப்பட்டன எனவும் வேட்பாளர்களின் பிரச்சார முகாம்கள் தெரிவித்துள்ளன.

நாடெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் கட்சி அங்கத்தவர்களை வாக்களிக்கச் செய்யும் முயற்சியில் வேட்பாளர்களின் பிரச்சார முகாம்கள் ஈடுபட்டுள்ளன.