May 26

நான் ஜெயிலுக்கு போவதை என் மனைவி விரும்பினால் நான் தயார்... நடிகரின் புலம்பல்!!

என் மனைவி ஆசைப்பட்டால் நான் ஜெயிலுக்கு போகவும் தயாராக இருக்கிறேன் என்று காமெடி நடிகர் தாடி பாலாஜி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

தன்னை ஜாதி பெயர் குறிப்பிட்டு கணவர் தாடி பாலாஜி திட்டுவதாக சமீபத்தில் அவரது மனைவி போலீசில் புகார் அளித்து இருந்தார்.இதுகுறித்து கருத்து தெரிவித்து இருந்த பாலாஜி, ‘’எங்கள் இருவருக்கும் ஏற்பட்டது எல்லா குடும்பத்திலும் தினமும் வரும் பிரச்னைதான். இதை என் மனைவி அரைமணிநேரம் தனியாக இருந்து யோசித்தால் எல்லா பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும். என் மனைவியின் குடும்பத்தார் பணத்துக்காக அவருடன் ஒட்டியிருக்கிறார்கள். மேலும் என் மனைவியை தவறாக வழிநடத்தி வருகின்றனர்.

நூறுசதவிகிதம் என் மனைவியை பார்த்துக் கொண்டதைவிட என் குழந்தையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். என் மனைவி பேசியதை அமைதியாக கேட்டுக் கொண்டு இருப்பதற்கு காரணம் என் குழந்தையே. என்றுமே என் மனைவியைக் குறித்து குறை சொல்லமாட்டேன்.

முதல் மனைவியை விவாகரத்து செய்தபிறகே நித்யாவை திருமணம் செய்தேன். எல்லாமும் அவருக்குத் தெரியும். என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து, ஜெயிலில் அடைக்க வேண்டும் என்பதே என் மனைவி தரப்பினரின் குறிக்கோளாக உள்ளது.

என் மனைவி ஆசைப்பட்டால் அவருக்காக ஜெயிலுக்கு போகவும் நான் தயார். அதற்கு முன்பு என் மனைவி கடந்த கால வாழ்க்கையை கொஞ்சம் நினைத்துப்பார்க்க வேண்டும்“ என்றார் கண்ணீர் மல்க கூறினார் தாடி பாலாஜி.