Jun 05

பிரான்ஸில் வெளியேற்றப்படும் அகதிகள்!

நேற்று, திங்கட்கிழமை மீண்டும் அகதிகள் இரண்டு முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பாரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள Canal Saint-Martin பகுதியில் கூடாரங்களில் தங்கியிருந்த அகதிகள் காலை 6.30 மணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதற்கு பின்னர் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Poissonniersக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் இருந்தும் அகதிகள் வெளியேற்றப்பட்டனர்.

இதனால் மொத்தமாக 973 அகதிகள் (குழந்தைகள், பெண்கள், ஆண்கள், குடும்பத்தினர் உட்பட) வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட அகதிகளுக்கு தற்காலிகமாக தங்குமிடங்கள் இல்-து-பிரான்சுக்குள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வார புதன்கிழமை 1,017 அகதிகள் மில்லேனியம் முகாமிலிருந்து (18 ஆம் வட்டாரம்) வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.