Jun 04

ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு

துப்பாக்கியால் பொதுமக்களை சுட்ட நபரை  ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள தேவாலயத்தில் போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

இது தீவிரவாதத் தாக்குதல் அல்ல என்றும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் போலீசார் பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.

சுற்றுலாவுக்குப் புகழ் பெற்ற தீவான பெர்லினர் டாம் எனுமிடத்தில் இரண்டு நபர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்தான் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.