May 26

வங்கியில் 2,50,000 டொலர் பணத்தை திருடிய பெண் ஊழியர் கைது

கனடா நாட்டில் வங்கி ஒன்றில் 2,50,000 டொலர் பணத்தை திருடியதாக முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மோண்டன் நகரில் ATB என்ற வங்கி இயங்கி வருகிறது.

இந்த வங்கியில் Joyce Melody Gogerla(61) என்ற பெண் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் பிரிவில் அதிகாரியாக 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வங்கியில் பணம் பரிவர்த்தனை செய்வதில் குளறுபடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், பெருமளவில் பணம் காணாமல் போயுள்ளது கண்டு உயர் அதிகாரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

விசாரணையை தொடங்கியபோது பெண் அதிகாரி சுமார் 2,50,000 டொலர் வரை பணத்தை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து வங்கி நிர்வாகம் பொலிசாரிடம் புகார் பதிவு செய்ததை தொடர்ந்து பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

பெண் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் ஊழியர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில், எதிர்வரும் யூன் 26-ம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளது குறிப்பிடத்தக்கது.