Jun 02

கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழர்!

கனடாவின் பெரு மாகாணமான ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத்துக்கான தேர்தல் இம்மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் ரூச் பார்க் தொகுதியில் முற்போக்கு பழமைவாத கட்சியின் சார்பில் விஜய் தணிகாசலம் வேட்பாளராக களமிறங்குகிறார்.  

காத்திரமான மாணவர் மற்றும் இளையோர் செயற்பாடுகளினூடாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழர் சமூகத்திற்கு நன்கு அறிமுகமான விஜய் இம்முறை இந்த தேர்தலில் களமிறங்கவுள்ளமை முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகிறது.