May 30

முன்னாள் காதலர்களை பழிவாங்க இந்த பெண் செய்த கொடூரத்தை பாருங்கள்!

கனடாவின் சாஸ்கடூன் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சா எமர்சன் (33). இவர் அமெரிக்க துணை நடிகை ஆவார்.

இவர் தனது முன்னாள் காதலர்களை பழி வாங்குவதற்காக அவர்களையும் அவர்களது உறவினர்களுக்கும் கொடுத்துள்ள தொல்லை அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.முன்னாள் காதலர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்கும் விதத்தில் இவர் அவர்களுக்கு போலியாக “ஆந்தராக்ஸ் பவுடர்” அனுப்பி டார்ச்சர் செய்துள்ளது தெரியவந்து உள்ளது.

அவர் உருவாக்கிய பிரச்சினைகளால் அவசர அழைப்புகளுக்கு இணங்க செயல்பட்ட போலீசார், மருத்துவ குழுக்கள் என அரசுக்கு 200,000 டாலர்கள் செலவு ஏற்பட்டது.

விசாரணைகளின் பின்னர் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதோடு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவள் மன நலம் பாதிக்கப்பட்டவராகத்தான் இருக்க முடியும் என கருதி சிறைத் தண்டனைக்குப் பின்னர் மன நலக் காப்பக சிகிச்சையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.