May 26

என்.பெரியசாமி மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான என்.பெரியசாமி மறைவையொட்டி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

என்.பெரியசாமியின் மறைவையொட்டி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

“என்னுடைய முரட்டுப் பக்தன்” என்று தலைவர் கருணாநிதியால் பாசத்துடன் அழைக்கப்பட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் பெரியசாமியின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

கழகத்தின் போர்க்குணமிக்க மாவட்டக் கழக செயலாளராக திகழ்ந்த அவரது மறைவிற்கு தலைவர் கருணாநிதி சார்பிலும், என் சார்பிலும், தி.மு.க.வின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், சொந்தங்களுக்கும், கழக தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் கருணாநிதி மீது தன் உயிரையும், என் மீது தனிப்பட்ட பாசத்தையும் வைத்திருந்தவர் அண்ணன் தூத்துக்குடி பெரியசாமி என்பதை நினைக்கும் போது, பெருமைமிக்க தொண்டரை இழந்த சோகம் எங்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது.