May 26

மான்செஸ்டரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி தொடர்பாக அதிர்ச்சி தகவல்

 இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் தற்கொலை படை தாக்குதல் நடத்தி, 22 பேரை கொலை செய்த பயங்கரவாதியின் குடும்பத்தினருக்கு, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து போலீசார் விசாரணை நடத்தியபோது, பயங்கரவாதியின் குடும்பம் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சல்மான் அபிதி, லிபியாவில் ஐ.எஸ்., அமைப்பில் பயிற்சி பெற்றதும், அவரின் சகோதரரான ஹாசிமுக்கு மான்செஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பே தெரியும் என தெரியவந்துள்ளது. 

இதையடுத்து ஹாசிமை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களின் தந்தையான ரமதான், 51, அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பவர் எனவும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அவரும் லிபியாவில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.