May 26

தேர்தலை சந்திக்க தயார் சொல்கிறார் ஜெயகுமார்

'உள்ளாட்சி தேர்தலை கண்டு பயப்படவில்லை. தேர்தலை எதிர்கொள்ள, தயாராகவே இருக்கிறோம்,'' என, நிதியமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: மாநில உரிமையை நிலைநாட்டவும், நிதி பெறுவதற்காகவும், பிரதமரை முதல்வர் சந்தித்தார். அரசியல் ஆதாயத்திற்காக, பிரதமரை சந்திக்கவில்லை.

மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் மட்டுமே, வளர்ச்சி பெற முடியும். மாநில வளர்ச்சிக்காக, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். பன்னீர் அணியினர், நிபந்தனை இல்லாமல் பேச்சுக்கு வந்தால் மட்டுமே, இணைப்பு குறித்து பேசப்படும்.

கட்சியின், 98 சதவீத நிர்வாகிகள், எங்கள் பக்கம் இருப்பதால், இரட்டை இலை எங்களுக்கு தான் கிடைக்கும். உள்ளாட்சி தேர்தலை கண்டு பயப்படவில்லை; எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.