May 26

மே18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு - Ajax St. Francis Centre

மே18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு  - Ajax St. Francis Centre

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழர் அறக்கட்டளையும் இணைந்து முன்னெடுத்த மே 18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு Ajax நகரில் மே18, 2018 வெள்ளிக்கிழமை உணர்வு பூர்வமாக நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு, இன அழிப்பினைக் கருத்தில் கொண்டு மே18 ஐ தமிழர் நினைவு நாளாகப் பிரகடனப் படுத்தக் கோரி Ajax வாழ் தமிழ் மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க கடந்த ஏப்பிரல் மாதம் 23 ஆம் நாள் நடைபெற்ற Ajax நகரசபைக் கூட்டத்தில் மே 18 தமிழர் நினைவேந்தல் நாளாக பிரகடனப் படுத்தப்பட்டதும் எமது இனத்தின் அழிப்பை உலக அரங்கில் கொண்டு செல்லும் முதல் படியாக பார்க்கப்பட வேண்டும். தொடர்ந்து எமது  இனத்தின் அழிப்பை கனடிய அரசியல் தலைவர்களூடாக உலக நீதியின் முன் கொண்டு செல்ல வேண்டியது புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழ் உறவுகளினதும் வரலாற்றுக் கடமை. இந்தக் கடமையைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழர் அறக்கட்டளையும் உரிமையோடு கேட்டு நிற்கிறதுமரம் நாட்டும்  நிகழ்வு. - Markham


கனடிய தமிழர் விளையாட்டுச் சங்கம் முன்னெடுத்த  உறவுகளின் நினைவு சுமந்த மரம் நாட்டும்  நிகழ்வு.முள்ளிவாய்க்காலில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளின் நினைவாக  நான்காவது ஆண்டாக இந்த ஆண்டு மே 19 ஆம்  நாள் சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை கனடிய தமிழர் விளையாட்டுச் சங்கத்தினால்  பொறுப்பேற்று பராமரிக்கப்படும்  பூங்காவில்  மரம் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் Canadian Tamil Community Trust (CTCT) என்ற அமைப்பும் பங்கேற்றுக்கொண்டது  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சிறியவர் பெரியோர் என உறவுகள் உணர்வோடு இந்த மரம்நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு மரங்களை நட்டது நெஞ்சை நெகிழ வைத்தது