May 26

மே18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு – Markham City Hall

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழர் அறக்கட்டளையும் இணைந்து முன்னெடுத்த மே 18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு Markham நகரில் மே17, 2018 வியாழக்கிழமை உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் Mayor Scarpitti                                      அவர்களின் செய்தியும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்  பிரதமர் திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்களின் செய்தியும்,   Regional Councillor Nirmala Armstrong, Councillors Alex Chiu, Karen Rea, Logan Kanapathi    ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். தொடர்ந்து எமது  இனத்தின் அழிப்பை கனடிய அரசியல் தலைவர்களூடாக உலக நீதியின் முன் கொண்டு செல்ல வேண்டியது புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழ் உறவுகளினதும் வரலாற்றுக் கடமை. இந்தக் கடமையைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழர் அறக்கட்டளையும் உரிமையோடு கேட்டு நிற்கிறது

2009ஆம் ஆண்டு தை மாதம் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டு இருப்பது தமிழ் இனப்படுகொலை எனவும் இதில்  கனடிய அரசு அக்கறை கொள்ள வேண்டும் என Markham நகரசபை கேட்டுக் கொண்டதும் நினைவு கூரப்பட வேண்டியதாகும்

மே18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு  - Mississauga City Hall

. சிங்கள அரசு திட்டமிட்டு எம் இனத்தின் மேல் மேற்கொண்ட இன அழிப்பினை  நமக்குள்ளே நாம் கூடி நினைவு கொள்வதென்பது கடந்து, நாம் வாழும் கனடிய மண்ணின் அரசியல் தலவர்களோடு முன்னெடுப்பது காலத்தின் தேவை. இதற்கமைய Mississauga வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழர் அறக்கட்டளையும் இணைந்து முன்னெடுத்த மே 18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வில் Mississauga Mayor Bonnie Crombie    அவர்கள் இனப்படுகொலை எனும் சொற் பிரயோகத்தோடு மே 18 இற்கான செய்தியை வழங்கியிருப்பதும் , நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்களின் செய்தியும், அத்துடன்  நகரசபை உறுப்பினர்களான Pat Saito, Ron Starr, கனடிய தமிழ் காங்கிரஸ் David Poopalapillai,  பீல் முதியோர் சங்கத் தலைவர் Nadarajah Sachchithaanantha Moorthy