May 25

ஜூன் 7-இல் புதிய ஸ்மார்ட்போன் வெளியிடும் சியோமி

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 7-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர் பதிவிடப்பட்டு இருந்தது.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அழைப்பிதழில் ஜூன் 7-இல் புதிய சாதனம் புது டெல்லியில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.புதிய சியோமி ஸ்மார்ட்போனின் விலை ஜூன் 7-ம் தேதி நடைபெறும் விழாவில் தெரியவரும். எனினும் இதன் விலை ரூ.15,000-க்குள் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

சியோமி ரெட்மி எஸ்2 சிறப்பம்சங்கள்:

- 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்

- அட்ரினோ 506 GPU

- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்

- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆன்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9

- டூயல் சிம் ஸ்லாட்

- 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா

- 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 3000 எம்ஏஹெச் பேட்டரி

புதிய சியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் கிரே, ரோஸ் கோல்டு, ஷேம்பெயின் கோல்டு மற்றும் பிளாட்டினம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவி்ல் 3 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,560) என்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,735) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.