May 24

பிரதமருக்கு சவால் விடுத்த கோலி - சவாலை ஏற்று வீடியோ வெளியிடும் மோடி

கிரிக்கெட் வீரர் விராட் கோலி விடுத்த ஃபிட்னஸ் சவாலை ஏற்று, உடற்பயிற்சி செய்யும் வீடியோவை விரைவில் வெளியிட இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார். 

இதையடுத்து, ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோலி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார்.

அந்த டுவிட்டர் பதிவில், ‘நான் ரத்தோர் விடுத்த சவாலை ஏற்று கொண்டுள்ளேன். இப்போது என் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோருக்கு இந்த ஃபிட்னஸ் சவாலை விடுக்கின்றேன்’, என கூறியிருந்தார்.இந்நிலையில், கோலியின் சவாலை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிடுவேன் எனவும் மோடி கூறியுள்ளார்.