May 25

அகதிகளுக்கான சில சேவைகளை இடைநிறுத்துகிறது ஒன்ராரியோவின் இலவச சட்ட உதவி மையம்

ஒன்ராரியோவின் இலவச சட்ட உதவி மையம் (Legal Aid Ontario) எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அகதிகளுக்கு வழங்கி வந்த சில சேவைகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்நடவடிக்கை மூலம் தனது வரவு-செலவுத் திட்டத்தில் 40% இனைச் சேமிக்கும் முயற்சியில் இலவச சட்ட உதவி மையம் இறங்கியுள்ளது.

எவ்வகையான சேவைகள் இடைநிறுத்தப்படலாம் என்பது தொடர்பாக இன்னமும் முடிவுகள் எடுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பான கலந்தாலோசனைகள் இவ்வாரம் ஆரம்பிக்கப்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் பின்வரும் 3 தெரிவுகள் ஆலோசிக்கப்பட உள்ளன.

 

1.   அகதிகள் மற்றும் குடிவரவாளர்களுக்கான சகல தேவைகளையும், நிதி உதவி நிறுதப்படும் எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பெர் மாதம் முதல் இடைநிறுத்துதல்

2.   தஞ்சக் கோரிக்கையாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்தலை மட்டுப்படுத்தல்

3.   தஞ்சக் கோரிக்கை தொடர்பான மேன்முறையீடுகளில் மட்டும் தஞ்சக் கோரிக்கையாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்தல்

இவ் அமைப்பின் அகதிகளுக்கான நிகழ்சித்திட்டங்களுக்காக வருடாந்தம் $ 20 மில்லியன் செலவாகின்றமை குறிப்பிடத்தக்கது.