May 22

இந்தியாவில் விற்பனைக்கு வரும் நான்கு புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ6, கேலக்ஸி ஏ6 பிளஸ் மற்றும் ஜெ6 மற்றும் ஜெ6 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன. சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, 18:5:9 ரக ஸ்கிரீன் கொண்டுள்ள நிலையில், கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் மற்றும் ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6 இன்ச் FHD பிளஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, லைவ் ஃபோகஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு புகைப்படங்களை எடுக்கும் முன்போ அல்லது எடுத்த பின்னரோ டெப்த் ஆஃப் ஃபீல்டை இயக்க வழி செய்கிறது. கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமராவும், ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 24 எம்பி செல்ஃபி கேமரா, மற்றும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ6 சீரிஸ் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மெல்லிய மெட்டல் வடிவமைப்பு, அதிக உறுதியுடனும் கையில் இருந்து நழுவமால் இருக்க ஏதுவான வடிவைப்பு கொண்டுள்ளது. இத்துடன் முக அங்கீகார வசதி, கைரேகை சென்சார், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, பிக்ஸ்பி விஷன், ஹோம், ரிமைன்டர் மற்றும் சாம்சங் பே மினி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.சாம்சங் கேலக்ஸி ஏ6 சிறப்பம்சங்கள்:

- 5.6 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 14nm சிப்செட்

- மாலி T830 GPU

- 4 ஜிபி ரேம்

- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ

- டூயல் சிம் ஸ்லாட்

- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7

- 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9

- கைரேகை சென்சார்

- சாம்சங் பே மினி

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 3000 எம்ஏஹெச் பேட்டரி