May 25

5300 எம்.ஏ.எச். பேட்டரி கொண்ட சியோமி எம்.ஐ. மேக்ஸ் 2 வெளியிடப்பட்டது

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்.ஐ. மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.44 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட எம்.ஐ. மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 5300 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

பவர் பேங்க் அளவு திறன் கொண்ட பேட்டரி என்பதால் எம்.ஐ. மேக்ஸ் 2 இரண்டு நாள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என சியோமி தெரிவித்துள்ளது. முழுமையான மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, ஆக்டாகோர் ஸ்ன்ப்டிராகன் 625 சிப்செட், 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்த வரை 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ், சோனி IMX386 சென்சார், 1.25 மைக்ரான் பிக்சல் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் கைரேகை ஸ்கேனர், ஸ்டீரியோ ஸ்பீக்கர், யுனிவர்சல் ரிமோட், குவிக் சார்ஜ் 3.0 வழங்கப்பட்டுள்ளதால், 1 மணி நேரம் சார்ஜ் செய்தால் 68 சதவிகித பேட்டரி சார்ஜ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சியோமி எம்.ஐ. மேக்ஸ் 2 சிறப்பம்சங்கள்:

* 6.44 இன்ச் டிஸ்ப்ளே

* ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் சிப்செட்

* 4 ஜிபி ரேம்

* 64 / 128 ஜிபி இன்டரென்ல் மெமரி

* 12 எம்பி பிரைமரி கேமரா

* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

* 5300 எம்.ஏ.எச். பேட்டரி

சியோமி எம்.ஐ. மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 64 ஜிபி மாடல் CNY 1,699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,000, 128 ஜிபி மாடல் CNY 1,999 அதாவது இந்திய மதிப்பில் ரூ.19,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் வரை சியோமி எம்.ஐ. மேக்ஸ் 2 இந்தியாவில் வெளியாவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.