May 25

மஞ்செஸ்டர் குண்டு தாக்குதல் : ரொரன்ரோவில் பாதுகாப்பு தீவிரம்

பிரித்தானியாவின மஞ்செஸ்டரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலின் எதிரொலியாக, ரொரன்ரோ நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் ‘Canadian superstar’ நிகழ்வும், அடுத்துவரும் வாரங்களில் அனைத்துலக பிரபலங்களின் நிகழ்வுகளும் எயர்கனடா நிலையத்தில் இடம்பெறவுள்ள நிலையில், எயர்கனடா நிலையத்தில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் பொதுப் பாதுகாப்பு ஆய்வாளரான கிறிஸ் லுயிஸ் கருத்து தெரிவிக்கையில், “பிரித்தானியாவின் மஞ்செஸ்டர் தாக்குதலில் பெருமளவானோர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், அது கலை நிகழ்வுகளுக்கு செல்பவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு பய உணர்வை ஏற்படுத்துவதுதான் பயங்கரவாதத்தின் விளைவு. இவ்வாறு மக்களை முடிந்தவரையில் கொன்றும், காயங்களை ஏற்படுத்தியும் அவர்களை அச்சத்துக்குள் தள்ளுவதே பயங்கரவாதத்தின் இலக்கு” என கூறினார்.