May 25

சீனக்கடலில் சுனாமி எச்சரிக்கை மையம்

சீனக் கடல் பகுதியில், சுனாமி எச்சரிக்கை மையம் நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை, மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இது குறித்து, நில அறிவியல் துறை செயலர் ராஜீவன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு, சுனாமி எச்சரிக்கை விடுக்கும் மையம், ஏற்கனவே நம்மிடம் உள்ளது.

இத்துடன், சீனக் கடல் பகுதியிலும், சுனாமி எச்சரிக்கை மையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆசியா ஆப்ரிக்கா நாடுகளுக்கான, இயற்கை பேரழிவு எச்சரிக்கை அமைப்பு தலைமைப் பொறுப்பில், நம் நாடு உள்ளது.

சீனக் கடல் பகுதியில், சுனாமி எச்சரிக்கை மையம் அமைப்பதற்கு, அரசு ரீதியிலான ஒப்புதல் இன்னும் தரப்படவில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஆசியா, ஆப்ரிக்கா நாடுகளுக்கு, சுனாமி குறித்த எச்சரிக்கைகளை, நாம் அளிக்க வழி பிறக்கும். இதனால், வியட்னாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பயனடையும். இவ்வாறு ராஜீவன் கூறினார்