May 25

காலம் போற வேகத்தை பார்த்தீர்களா... கங்குலி மகள் மாடலிங் உலகில் குதிச்சாச்சு!

கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் மகள் சனா இப்போது சிறுமி கிடையாது. டீன் ஏஜின் நடுவில் இருக்கும் இளம் பெண். அப்படித்தான் அவரது புகைப்படங்களும் சொல்கிறது.

லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்தை வீழ்த்திய வெறியில், தனதது சட்டையை கழற்றி சுற்றிய ஆக்ரோஷ கங்குலி ரசிகர் மனதில் இருந்து அகலவில்லை. ஆனால் அதற்குள் அவர் ஒரு பொறுப்பான தந்தையாக விளங்க வேண்டிய வயதில் இருப்பதை கங்குலி மகளின் வளர்ச்சி காட்டிவிட்டது.

தினமும் ஒரு செலப்ரிட்டிகளின் குடும்பத்தார் போட்டோக்கள் வெளியே வந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அதில் லேட்டஸ்ட்தான் கங்குலி மகளின் போட்டோ.கங்குலி மகள் சனா, சினிமா ஸ்டார்களுக்கு உரித்தான முகவெட்டுடன் காட்சியளிக்கிறார். தற்போது, முன்னணி ஜுவல்லரி விளம்பரத்தில் நடித்து வருகிரார்.

அப்படி நடக்கும்போது எடுத்த போட்டோஷூட் வெளியாகியுள்ளது.சனாவின் முதலாவது போட்டோ ஷூட் இதுவாகும். இந்த போட்டோவில் சிவப்பு வண்ண சேலை உடுத்தி உள்ளூர் பெண்ணாய் மிளிர்கிறார் சனா.சில போட்டோக்களில் தந்தையான கங்குலியும் சனாவுடன் உள்ளார்.

விளம்பரத்தில் அப்படித்தான் நடிக்க கூறியிருப்பதாக கூறப்படுகிறது. மகளுக்கு கிப்ட் வாங்கித் தரும் தந்தை கதாப்பாத்திரத்தில் கங்குலி நடித்திருப்பதாக தெரிகிறது.கங்குலி தனது மகளுடன் நகை விளம்பரத்தில் தோன்ற உள்ளார் என வெளியான ஒரு செய்தியை தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ள கங்குலி, அதில், டெபுடன்ட் என குறிப்பிட்டுள்ளார்.

முதல் முறையாக களமிறங்கும் கிரிக்கெட் வீரர்களை அழைக்கும் வார்த்தை அது.