May 18

சர்வதேசமே....!

சர்வதேசமே....!

இந்தக் கொடுமையைப் பார்த்து

சர்வசாதாரணமாக 

நீ விட்டு விலகிவிட்டாயா???

சிங்களத்தின் இனவெறிச் 

சன்னதம் நிகழ்ந்த

முள்ளிவாய்க்காலில்

தன் தாயின் சாவை

தன்னருகில் வைத்து

தன் கண்ணால் பார்த்த

பச்சிளம் பாலகி மனம்

படும்பாட்டை பாருங்கள் இது

படமல்ல நிஜம்.....

என் அம்மா எப்போது எழுந்திருப்பா

என் அம்மா எப்போது

என்னைக் கட்டி அணைப்ப

என் தலையில் ஏற்பட்ட

காயத்தின் கட்டைத் தடவி

எப்போது என் மீது அன்பைக் கொட்டுவ

எனது வலியை தனது வலி ஆக்கி

எனக்காகத் துடிக்கும் 

என் அன்பு அம்மாவே 

எனக்காக எழுந்திரு 

என்னருகில் 

என்னண்ணன் அழுகின்றான்

என்னக்கா படுத்திருந்து பதறுகின்றாள்

என் அப்பா 

என்னைப் பார்த்து

உன்னைப் பார்த்து

ஏனம்மா விம்முகின்றார்?

பசிக்குதம்மா பால் வேண்டும்

பச்சிளம் பாலகி நான் 

பரிவுடனே கேட்கின்றேன்

எழுந்து என்னுடனே கதையுமம்மா

எனக்கு............................ என்று

இந்தத் தமிழ்க் குழந்தை 

படும்பாட்டைப் பார்க்க முடியுதா

உங்களால்???

உலகத்து உத்தமர்களே!

உலகத்து மனித உரிமை வாதிகளே!

இன்னுமிருக்குது

இன்னுமா இதைப் பார்த்து

மௌனிகளானீர்கள்???

தமிழன் இனமென்றால்

இரக்கம் காட்ட மாட்டீரோ???


-சிவேந்தன்-