May 17

பாடசாலை பேரூந்து மீது மோதிய வாகனம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை பேரூந்து மீது மோதிய வாகனத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஈட்டோபிக்கோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Thirteenth Street மற்றும் Lake Shore Boulevard பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பாடசாலை பேருந்து மீது 23 வயது பெண் ஒருவர் செலுத்தி வந்த வாகனமே மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது, குறித்த அந்த வாகனத்தில் இருந்த 25 வயது ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், வாகனத்தின் சாரதியான பெண்ணும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துக்கு மது போதை காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ள போதிலும், குறித்த அந்த பெண் சாரதி மீது இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை எனறு கூறப்படுகிறது. இந்த விபத்து இடம்பெற்ற வேளையில் குறித்த அந்த பேரூந்தில் எவரும் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.