May 25

நிரந்தர வதிவுரிமை பெறும்பொருட்டு கனடாவை நாடும் அதிகளவான சர்வதேச மாணவர்கள்

அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 2017 / 2018 ஆம் கல்வி ஆண்டிற்கு கனேடிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உயர்கல்விக்காகப் பதிவு செய்துள்ள சர்வதேச மாணவர்களின் தொகை அதிகரித்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அதிகளவான சர்வதே மாணவர்கள் கனடாவில் உயர்கல்வியை மேற்கொள்கிறார்கள், பட்டம் பெற்றவர்கள் கனடாவில் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

உயர்கல்விக்காக கனடாவிற்கு வரும் சர்வதேச மாணவர்களில் 50% ஆனவர்கள் ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலேயே கல்வி கற்கின்றனர். ஒன்ராரியோ மாகாணத்திற்கு அடுத்தபடியாக பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களிலேயே அதிகளவான சர்வதேச மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.