May 25

எட்மண்டன் நகரில் பிரதமர் ரூடோ

அல்பேர்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில் நடைபெற்ற TELUS World of Science என்ற நிகழ்விற்கு விஜயம் செய்த கனேடியப் பிரதமர் ரூடோ, அங்கு கனேடிய சிறுவர் நலக்கொடுப்பனவு தொடர்பாக உரையாற்றினார்.

2016 ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் லிபரல் அரசினால் அறிமுகம் செய்யப்பட்ட  சிறுவர் நலக்கொடுப்பனவின் மூலம் வருடாந்தம் $ 30,000 இற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்கள் கொடுப்பனவுகளைப் பெறுகின்றன.

இக்கொடுப்பனவுகளின் மூலம் பல கனேடியக் குடும்பங்கள், பொழுதுபோக்குத் தலங்களுக்கு செல்லும் வாய்புக்களைப் பெற்றிருப்பதாகப் பிரதமர் அங்கு குறிப்பிட்டார். மேலும் கனேடியக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையை இகொடுப்பனவுகள் பெருமளவில் குறைப்பதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.