May 16

வியாழன் நிலவில் நீர் இருப்பது உறுதி

வியாழன் கிரகத்தின் நிலவான ஐரோப்பாவில் நீர் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஹப்பிள் தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மூலம் ஐரோப்பாவின் மேற்பகுதியில் பல கிலோமீற்றர் உயரத்திற்கு பனி அடுக்குகள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் ஐரோப்பா நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ள நாசா, இதன் மூலம் பூமியைத் தவிர தண்ணீர் உள்ள மற்றொரு கிரகம் என்றும் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதற்காக ஐரோப்பாவின் மேற்பகுதியில் ரோபோ மூலம் துளையிட்டு ஆய்வு செய்வது சிக்கலான மற்றும் சிரமமான செயல் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.