Mar 12

அகதிகள், தஞ்சக் கோரிக்கை தொடர்பான கருத்தரங்கு

பிரித்தானியாவில் அகதிகள் தஞ்சக்கோரிக்கை தொடர்பான கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை 18 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. தமிழர் தகவல் நடுவகத்தினால் ஏற்பாடு சச்யப்பட்டுள்ள இந்தக்கருத்தரங்கு University of Westminster Harow Campus மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழர்    தகவல் நடுவகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 
"கடந்த மார்கழி மாதம் ( 2016 ) தமிழ் தகவல் நடுவத்தினால் (TIC) நடத்தப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுக்காகன கருத்தரங்கில் அகதிகளும் புலம்பெயர்வும் என்ற அமர்வில் கலந்துரையாடப்பட்ட தரவுகளை உள்வாங்கி அதனை மேலும் செழுமைப்படுத்தி செயலில் முன்வைக்கும் ஒரு முயற்சியாக இக்கூட்டம் அமைகின்றது. இதை ஒரு தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளும் ஆர்வமும், திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத் தொடரின் முதலாவது முயற்சியே இதுவாகும்.

பயனடைபவர் யார்?

அகதி அந்தஸ்திற்கு விண்ணப்பித்திருப்பவர்கள், விண்ணப்பிக்க இருப்பவர்கள், அவர்களின் உற்றார், உறவினர், நண்பர்கள், அகதிகள் விவகாரத்தில் செயற்படும் அமைப்புகள், சட்டத்தரணிகள் இவர்களே இக்கலந்துரையாடலின் நேரடி பயனாளிகளும் பங்காளரும் ஆவார்

கூட்டத்தின் தற்போதைய அவசியம் என்ன?

அகதிகள் விண்ணப்பம், அவர்கள் உரிமைகள் போன்ற முக்கிய விடயங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை கொண்டுவர பிரித்தானியா அரசாங்கம் முற்பட்டு வருகின்றது. ஏற்கனவே உள்ள அடிப்படை உரிமைகள், அவற்றில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பான தகவல் அறிவும்இ விழிப்புணர்வும் விண்ணப்பதாரிகளிற்கும்இ அவர்கள் தொடர்பில் செயற்படுவர்களிற்கும் அவசியமாகும்.

கூட்டத்தின் அவசர முக்கியத்துவம் உணர்ந்து அக்கறையுள்ள அனைவரும் கலந்து கொண்டு கருத்துப் பரிமாறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இடப்பற்றாக்குறை இருப்பதினால் முதல் வருபவர்களுக்கு முன்னிருமை வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.