May 25

பாகிஸ்தானுக்கு எதிராக தீவிர நடவடிக்கை: சுப்பிரமணியன் சாமி

பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அடுத்த கட்டமாக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள, அந்நாட்டு ராணுவ நிலைகளை தகர்க்க வேண்டும். இதன் மூலம், பாக்., அரசின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.