May 25

சேவாக் கையெழுத்திட்ட பேட் கிடைத்ததால் இசையமைப்பாளர் தமன் செம மகிழ்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் என வர்ணிக்கப்படும் வீரேந்திர சேவாக் கையெழுத்திட்ட பேட் கிடைத்திருப்பதால் இசை அமைப்பாளர் தமன் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

எஸ்எஸ் தமன் இசை அமைப்பாளர் என்பதை தாண்டி கிரிக்கெட் ரசிகர் மற்றும் திரைத்துறையில் உள்ள நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் பழக்கமுடையவர். இவருக்கு கிரிக்கெட் வீரர் சேவாக் கிரே-நிகோல்ஸ் பேட்டை கையெழுத்திட்டு பரிசாக அளித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள தமன், குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் கிரிக்கெட் பேட்டை வீரேந்தர் சேவாக் கையழுத்து பெற்று வாங்கியிருக்கிறேன்.

மிகவும் நன்றி என்று பதிவிட்டிருக்கிறார்.கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்ற மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எஸ்எஸ் தமன் தீம் சாங் கம்போஸ் செய்திருந்தார். அந்தப்பாடலை கடந்த வருடம் சேவாக் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.