வட்டுவாகலில் ஒப்படைத்த உறவுகள்எங்கே?
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் பற்றி தாம் சாட்சியமளித்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் அனைத்தும் குப்பைத் தொட்டிக்குள் போடப்பட்டுள்ளதாக காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவில் ஆரம்பித்துள்ள போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது.
இந்நிலையில் தாம் பல்வேறுபட்ட ஆணைக்குழுக்களில் சாட்சியமளித்தாகவும், எனினும் அவை தூக்கி எறியப்பட்டுள்ளதாகவும் இறுதி யுத்தத்தில் தனது மகளை இராணுவத்திடம் ஒப்படைத்த முல்லைத்தீவு கள்ளபாடு எனும் இடத்தை சேர்ந்த தாய் ஒருவர் தெரிவித்தார்.
தாம் பொம்மைகள் அல்ல என தெரிவிக்கும் மக்கள் அரசியல்வாதிகளும் தங்களை வாக்குகளுக்கு மாத்திரம் பயன்படுத்துவதாகவும், குற்றம்சுமத்தியுள்ளனர்.