May 24

மத்திய அரசின் கையில் சிக்கி தமிழக அரசு தவிக்கிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு

மத்திய அரசின் கையில் சிக்கி தமிழக அரசு தவிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது. மத்திய அரசு தமிழக அரசை தனது கைக்குள் வைத்திருக்கிறது. மத்திய அரசின் கையில் சிக்கி தமிழக அரசு தவித்துக் கொண்டிருக்கிறது.

ஆளும் கட்சி பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமர் மோடியை அடிக்கடி சந்திப்பதும், அவருக்கு அஞ்சி செயல்படுவதும் வேதனை அளிக்கும் வி‌ஷயமாக உள்ளது. இப்படி மத்திய அரசு தமிழக அரசில் தலையிடுவது ஜனநாயக விரோதமாகும்.

நீதிபதி கர்ணனுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை அமல் படுத்தப்பட்டால் அது நீதித் துறைக்கே அவமானமாக அமையும். எனவே இந்த வி‌ஷயத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்.

சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவரை போற்றி வணங்குகிறது.