May 24

மனநல பாதிப்பால் 3 பிள்ளைகளை கொன்ற தந்தை: தண்டனை கிடைக்குமா?

கனடாவில் மனநலம் குன்றிய தந்தை ஒருவர் தனது 3 பிள்ளைகளை கொலை செய்தது தொடர்பான விசாரணை மீண்டும் மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள வான்கூவர் நகரில் Allan Schoenborn என்பவர் Kaitlynne(10), Max(8) மற்றும் Cordon(5) என்ற 3 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.

தந்தை மனநலம் குன்றியவர் என்பதால் அவருக்கு தெரியாமல் அவர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 10 வயது மகளை அவர் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு மற்ற இரண்டு பிள்ளைகளை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுள்ளார்.

இச்சம்பவம் அறிந்து பொலிசார் தந்தையை கைது செய்தனர். அப்போது, தந்தை ஒரு மனநலம் குன்றியவர் எனவும், அவரது சுயநினைவின்றி இச்சம்பவங்கள் நிகழ்ந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அவரது மனநலம் குறித்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வந்துள்ளது.

இதன் விளைவாக, கடந்த 2015-ம் ஆண்டு கொலைக் குற்றவாளி என்ற வழக்கில் இருந்து தந்தை விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர், மனநல மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

எனினும், மூன்று பிள்ளைகளை கொலை செய்த வழக்கு, அதன் பின்னணி சம்பவங்கள் மற்றும் தந்தையின் மனநிலை தொடர்பாக மீண்டும் மறுஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.