May 10

ஆப்பிள் ஐபோன் வைத்துக்கொள்ளாத ஆப்பிள் பங்குதாரர்!!!

உலக பணக்காரர்களில் மிக முக்கியமானவரும், ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்குதாரரருமான வாரன் பபெட், பிலிப் மாடல் மொபைல்போனையை பயன்படுத்திவருகிறார்.

ஆப்பிள் நிறுவனத்தின் பங்குதாரர்களாக 10க்கும் மேற்பட்டோர் இருப்பினும், நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை தன்னகத்தே கொண்டுள்ள வாரன் பபெட்டின் பெர்க்ஷியர் ஹாத்வே நிறுவனம், நிறுவன பங்குதாரர்களின் முதன்மையானவர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த வாரன் பபெட் கூறியதாவது, ஆப்பிள் நிறுவனத்தை தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அந்நிறுவனத்தை முழுவதுமாக கையகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். தனக்கு தொழில்நுட்பம் குறித்த போதிய புரிதல் இல்லையென்றாலும், ஆப்பிள் தொழில்நுட்பம் மிகவும் பிடித்துள்ளதாலேயே, இதில் தங்கள் நிறுவனம் பங்குதாரராக இருப்பதாகவும், ஆப்பிள் நிறுவனத்தை, முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் தனக்கு தொழில்நுட்பம் குறித்த புரிதல் அதிகமில்லாததால் தான், பிளிப் வகை மொபைல்போனையே பயன்படுத்தி வருவதாகவும், தான் ஆப்பிள் ஐபோனை பயன்படுத்தியதில்லை என்று அவர் கூறினார்.

கார்மெண்ட்ஸ், பர்னிச்சர், தங்க நகை, ரயில்பாதை என 90க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நிர்வகித்து வரும் வாரன் பபெட்டின் பெர்க்ஷியர் ஹாத்வே நிறுவனம், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஐபிஎம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பெருமளவிலான முதலீடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.