May 08

புதிய அப்டேட்டால் உயிர்ப்பெறவுள்ள NOKIA 7 PLUS

HMD Global நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான நோக்கியா 7 பிளஸ் விரைவில் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த அப்டேட்டில் டூயல் VoLTE வசதி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை HMD Global நிறுவன மூத்த அதிகாரியான ஜூஹோ சர்விகாஸ் ட்விட்டர் மூலம் உறுதி செய்திருக்கிறார். இரண்டாம் சிம் விரைவில் டூயல்-வோல்ட்இ வசதியை பெறும் (Second-SIM will get dual-VoLTE shortly) என தனது ட்விட்-இல் அவர் குறிப்பிட்டிருந்தார்.

புதிய நோக்கியா 7 பிளஸ் அதன் தலைசிறந்த வடிவமைப்பு மற்றும் கேமரா அம்சங்களுக்கு அதிக பாராட்டைப் பெற்றாலும் கூட இரண்டாவது சிம் ஸ்லாட்டில் VoLTE வசதி வழங்கப்படாதது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்யும் விதமாகவே தற்போது இந்த புதிய அப்டேட் வழங்கப்படுகிறது.