May 08

ரொறன்ரொ கத்திக் குத்து – சந்தேக நபருக்கு பொலிஸார் வலைவீச்சு

ரொறன்ரொவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து விவகாரத்தில் தொடர்புடைய சந்தேக நபரை, பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை, ரொறன்ரோ பொலிஸின் மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

அத்தோடு இக் கொலை சம்பவம் தொடர்பில், தகவல்கள் எதுவும் தெரியுமாயின் தங்களை தொடர்புக் கொள்ளுமாரு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குயின் வீதி கிழக்கு மற்றும் விக்டோரியா பார்க் அவனியூ பகுதியில்  நேற்று இரவு வேளை இந்த கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ள ரொறன்ரோ பொலிஸார், உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.