May 07

நோக்கியா 7 பிளஸ் பெறும் புதிய அப்டேட்

ஹெச்எம்டி குளோபல் சமீபத்தில் அறிமுகம் செய்த நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் புதிய அப்டேட் இந்த வசதியை வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான நோக்கியா 7 பிளஸ் விரைவில் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த அப்டேட்டில் டூயல் வோல்ட்இ வசதி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை ஹெச்எம்டி குளோபல் நிறுவன மூத்த அதிகாரியான ஜூஹோ சர்விகாஸ் ட்விட்டர் மூலம் உறுதி  செய்திருக்கிறார். இரண்டாம் சிம் விரைவில் டூயல்-வோல்ட்இ வசதியை பெறும் (Second-SIM will get dual-VoLTE shortly) என தனது ட்விட்-இல் அவர் குறிப்பிட்டிருந்தார்.

புதிய அப்டேட் குறித்து சரியான தேதியை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நோக்கியா 7 பிளஸ் அதன் தலைசிறந்த வடிவமைப்பு மற்றும் கேமரா அம்சங்களுக்கு அதிகம் பாராட்டப்பட்டது. எனினும் இரண்டாவது சிம் ஸ்லாட்டில் வோல்ட்இ வசதி வழங்கப்படாதது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. நோக்கியா 7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

- 6.0 இன்ச் 2160x1080 ஃபுல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3

- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்

- அட்ரினோ 512 GPU

- 4 ஜிபி ரேம்

- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ

- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

- 12 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்

- 16 எம்பி செல்ஃபி கேமரா

- கைரேகை சென்சார்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 3800 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் சமீபத்தில் விற்பனை துவங்கப்பட்ட நிலையில் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக்/காப்பர் மற்றும் வைட் /காப்பர் என டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளம் மற்றும் சங்கீதா, பூர்விகா, பிக் சி, க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற ஆஃப்லைன் வர்த்தக மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.25,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய நோக்கியா 7 பிளஸ் விவோ வி9, ஒப்போ F7 பிளஸ் மற்றும் மோட்டோ X4 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.