May 24

மான்செஸ்டர் குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி அறிவிப்பு

மான்செஸ்டர் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி என சல்மான் அபேதி(22) என்பவனை போலீசார் அறிவித்துள்ளனர்.

இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலியாயினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் அறிவித்துள்ளனர். லிபியாவில் இருந்து சிறுவயதில் அகதியாக இங்கிலாந்து வந்த 22 வயதான சல்மான் அபேதி என்பவன் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இவன் மான்செஸ்டர் நகரின் பல்வேறு முகவரிகளில் வசித்து வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். இந்த தாக்குதல், குழுவாக நடத்தப்பட்டதா அல்லது அவன் தனித்து செயல்பட்டானா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.