May 05

சீன வலைத்தளத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 6 அம்சங்கள்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் விரிவான சிறப்பம்சங்கள் சீன வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது.

ஒன்பிளஸ் 6 இந்தியாவில் தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. ஸ்மார்ட்போனின் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் மே 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஒன்பிளஸ் சார்பில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் சார்ந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒன்பிளஸ் 6 சீன வலைத்தளமான TENAA சான்று பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போனின் புகைப்படம் கிடைக்காத போதும் சிறப்பம்சங்கள் முழுமையாக பட்டியிலிடப்பட்டுள்ளன.

சீன தளத்தில் இடம்பெற்றிருக்கும் ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட்ட இருக்கிறது. இத்துடன் 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா, 3300 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்க டேஷ் சார்ஜ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுகின்றன.

ஒன்பிளஸ் 6 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 AMOLED டிஸ்ப்ளே

- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்

- அட்ரினோ 630 GPU

- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்

- 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி

- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1

- டூயல் சிம் ஸ்லாட்

- 16 எம்பி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7, 1/2.6″  சோனி IMX519 சென்சார், 1.22μm பிக்சல்

- 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7

- 16 எம்பி செல்ஃபி கேமரா

- கைரேகை சென்சார்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி

- 3300 எம்ஏஹெச் பேட்டரி, டேஷ் சார்ஜ்

புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் மே 16-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் தெரியவரும்.