May 24

மகன் சிபியால் சத்யராஜின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்!

சத்யராஜின் மகன் சிபிராஜ் கொடுத்த புகாரை அடுத்து நடிகர் சத்யராஜின் போலி பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

பாகுபலிக்கு பிறகு சத்யராஜின் புகழ் உலகம் முழுதும் பரவியுள்ளது. படத்தில் சத்யராஜ் கட்டப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார் என்று பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சத்யராஜ் பேஸ்புக், டுவிட்டரில் இல்லை என்பதால் அவர் மகன் சிபிராஜின் டுவிட்டர் பக்கத்தில் திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜின் பெயரில் யாரோ போலி பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளனர்.

இதனை பார்த்த சிபிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அப்பா பெயரில் தொடங்கப்பட்டுள்ள போலி பக்கம் இது. நண்பர்கள் எல்லோரும் புகார் தெரிவித்து கணக்கை முடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடு்த்து பலரும் புகார் தெரிவித்ததால் பேஸ்புர் சத்யராஜின் போலி கணக்கை முடக்கியது.