May 24

பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு

 டில்லி சென்ற தமிழக முதல்வர் பழனிசாமி, இன்று(மே 24), பிரதமர மோடியை சந்திக்கவுள்ளார்.

மத்திய பா.ஜ., அரசின் ஆதரவை பெறுவதில், அ.தி.மு.க., அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. மே, 19ல், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், ராஜ்யசபா, எம்.பி., மைத்ரேயன், முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி, முன்னாள், எம்.பி., மனோஜ்பாண்டியன் ஆகியோர், டில்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது, இரு அணியினரும் இணைய வேண்டும் என, பிரதமர் விருப்பம் தெரிவித்து உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, பிரதமரை சந்தித்து பேசுவதற்காக, நேற்று(மே 23) மாலை, 5:00 மணிக்கு, முதல்வர் பழனிசாமி, டில்லி புறப்பட்டு சென்றார். அவருடன், அமைச்சர் தங்கமணி, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் சென்றுள்ளனர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று காலை, 11:30 மணிக்கு, பிரதமரை சந்திக்க உள்ளார்.