May 04

மே தின நிகழ்வுகளில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய ஐவர் கைது

மொன்றியலில் முன்னெடுக்கப்பட்ட மே தின நிகழ்வுகளில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொன்றியலில மூன்று இடங்களில் சர்வதேச தொழிலாளர் தினத்தில் மூன்று பேரணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மொன்றியல் டவுன்ரவுனுக்கு கிழக்கே, லஃபொன்டெய்ன் பூங்கா பகுதியில் இடம்பெற்ற பேரணியிலேயே குறித்த கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் டவுன்ரவுன் வீதிச் சந்திப்பு ஒன்றினை வந்தடைந்த வேளையில், அந்த போரணியில் இருந்தவர்கள் பொலிஸார், மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட அந்த ஐந்து பேர் மீதும் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டமை, பொலிஸாரை கடமையில் ஈடுபட விடாது திசைதிருப்பியமை, ஒழுக்க குறைவாக நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.