May 03

வெள்ளப்பெருக்கின் தாக்கம் அதிகரிக்கும் – நியூ பிரன்சுவிக் மக்களுக்கு எச்சரிக்கை

கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜான் (St. John) ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை வெளியேறும்படி அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் நீர்மட்டம் உயர்ந்து செல்ல வாய்ப்பிருப்பதாகவும் தென்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ இயக்குனர் Gary MacCallum எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் வெள்ளநீரின் அளவானது 5.8 மீட்டர் (19 அடி) வரை உயரலாம் எனவும், 1973 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் இதுவே அதிகளவில் பதிவான நீர்மட்டமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

ஐந்து நாட்களாகத் தொடரும் வெள்ளப்பெருக்கானது அடுத்த 48 மணித்தியாலத்தில் கரைபுரண்டோடுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.