Mar 12

தமிழ் கூட்டமைப்பின் வவுனியா தீர்மானத்தை நிராகரிக்கின்றோம்; ரெலோ செயலாளர் சிறிகாந்தா

வவுனியாவில் கடந்த சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்ற  கூட்டத்தில் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பிலும் அதன் செயலாளர் நாயகம் என்ற அடிப்படையிலும் நிராகரிக்கின்றோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

 

 எமது கட்சியைப் பொறுத்தமட்டில் கடந்த மாதம் 18 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற எமது அதியுயர் பீடமான தலைமைக் குழுக் கூட்டத்தில் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் அரசாங்கத்திற்கு இனிமேலும் கால அவகாசத்தை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் மன்றம் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி   ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் இப்போதும் எமது கட்சியின் நிலைப்பாடாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.